>>
மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு ஒத்திவைப்பு!!

புதுடில்லி:மருத்துவ கல்வி மாணவர்களுக்கான 'நெக்ஸ்ட்' தேர்வு, 2019ம் ஆண்டு பேட்ச் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனையடுத்து மத்திய அமைச்சகத்தின் வேண்டுகோளை ஏற்று 'நெக்ஸ்ட்' தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை தேர்வு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
புதுச்சேரியில் 15ம் தேதி பள்ளிகள் இயங்கும்… 22ம் தேதி விடுமுறை.!

புதுச்சேரியில் ஜூலை 22ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
காலாண்டு, அரையாண்டு தேர்வுக்கு விடுமுறை அறிவிப்பு

6-12ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கான உத்தேச காலஅட்டவணை வெளியாகியுள்ளது 6-12ம் வகுப்புக்கு காலாண்டு தேர்வு செப்.15 -27 வரையும் அரையாண்டு தேர்வு டிச.11 - 22 வரையும் நடைபெறும். இவற்றை பின்பற்றி மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. காலாண்டு-க்கு ஒரு வாரமும், அரையாண்டு-க்கு 10 நாட்களுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
எந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?

கனமழை காரணமாக நீலகிரி முவதும் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வால்பாறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை , விருதுநகர் மற்றும் சேலம் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  4 தாலுகாக்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் நீலகிரி மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . கோவை மாவட்டம், வால்பாறையில் இன்று மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக  மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி மாநில ஆளுகைக்கு உட்பட்ட கேரளாவில் உள்ள பிராந்தியமான மாகே பகுதியில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
நாளை இந்த மாவட்டங்களில் பள்ளி விடுமுறை!!

தமிழகத்தில் உள்ளூர் விசேஷ நாட்களில் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் விடுமுறையை அறிவிப்பார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். 

 

அந்த வகையில் நாளை நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மட்டும் விடுமுறை என அந்த மாவட்டத்தின் ஆட்சி தலைவர் அறிவித்துள்ளார். 

 

நாளை சிக்கல் சிங்காரவேலர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை அடுத்து நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் வழக்கம் போல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜூலை எட்டாம் தேதி சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

கலை கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடக்கம் தமிழகம் முழுவதும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடக்கம் மாணவர்களை வரவேற்க கல்லூரிகளில் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், ராகிங் போன்ற அத்துமீறல்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் கல்வி இயக்குநரகம் சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளன

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
மாணவர்களுக்கு புதிய உணவு பட்டியல் வெளியீடு!!

மாணவர்களுக்கு வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!!தற்போது செயல்படுத்தப்பட்டும் வருகிறது. இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு ரூ. 33.56 கோடி ஒதுக்கீட்டை வழங்கியுள்ளது. மாணவர்களுக்கு தினமும் காலை சிற்றுண்டியாக உப்புமா, கோதுமை ரவா, வெண்பொங்கல், கிச்சடி முதலியவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வகையில் தற்போது “முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தின்” கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் புதிய உணவு பட்டியல் கொண்டு வரப்பட்டுள்ளதுஇந்த புதிய உணவு பட்டியலின் கீழ் திங்கள் கிழமை அன்று ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா வழங்கப்பட உள்ளது.

செவ்வாய்க்கிழமை அன்று ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவை கிச்சடி வழங்க உள்ளது. அதே போல் புதன் கிழமை அன்று காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல் மற்றும் வெண்பொங்கல் வழங்கப்படும்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

பொறியியல் சேர்க்கை விதிகளில் மாற்றம் - அரசாணை வெளியீடு.

2023-2024ம் கல்வி ஆண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் 10ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்படாது என அரசாணை வெளியீடு.

கொரோனா காலத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாததால் விதிகளில் மாற்றம்.

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 

கனமழை காரணமாக இன்று நடைபெறவிருக்கும் பிளஸ் 2 துணைத் தேர்வு ரத்தா? - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

மழை காரணமாக 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுத்துள்ள நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த +2 துணைத் தேர்வு தேதி மாற்றப்படாமல் இன்றே நடக்கும்

Advertisement: - கிளிக் செய்க 👇👇👇
 
FIRST |  PREV  ( Page 3 of 86 )   NEXT |  LAST